ருத்ராக்ஷம் வகைகள் மற்றும் ருத்ராக்ஷம் அணிவதன் நன்மைகள்!

0

  •  அக்க்ஷம் என்றால் கண்கள் என்று ஒரு பொருள் உண்டு. ருத்ராக்ஷம் என்றால் சிவனின் கண்கள் என்று சொல்லலாம் .
  • மனிதர்களுக்கு உடலில் உள்ள உறுப்புகள் வித விதமாக அமையலாம் ஆனால் கண்கள் எல்லோருக்கும் ஒன்று போல் தான் அளவு மேலும் 2 கண்கள் தான் உண்டு .
  • இதுவே ஒளியை கொண்டு வழிகாட்டுதல் என்னும் செயலை செய்கிறது .
  • 2 கண்கள் இருந்தாலும் ஒரு பொருளை பார்க்கும் பொழுது இரண்டும்
  • ஒன்று போலத்தான் பார்க்கும் .
  • உடலில் கண்பார்வை இல்லை என்ற நிலை வந்தால் இதை விட மிக பெரிய தண்டனை கிடையாது .
  • இப்படி உள்ள கண்கள் சிவ பெருமானுக்கு ,வலது, இடது மற்றும் அக்னி என்னும் புருவ மத்தியில் ஒன்று .
  • இந்த கண்ணை ஞான கண் என்றும் ,சுடர்விழி என்றும் சொல்லலாம் .
  • இந்த கண் தான் மண் மீது விழுந்து தாவரமாக முளைத்து ருத்ராக்ஷம் என்று பெயர் கொண்டு கனிகளை முதலில் தோற்று வித்து பிறகு காய்களாக உருமாரி உதிர்ந்து மண்ணில் விழுகிறது .
  • இதில் பல வகைகள் உண்டு .
  • இந்த மணிகளின் தன்மைகளை புரிந்து கொள்வோம் .
  • எந்த மாதிரியான வெப்பம் /குளிர் என்றாலும் தாங்கும் சக்தி படைத்தவைகள் இந்த மணிகள் .
  • மனிதனின் உடலில் இவைகள் அணியப்பட்டு இருக்கும் பொழுது உடலில் உள்ள வெப்பத்தை சரி செய்யும் .
  • கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் பொழுது ஜடார்அக்னியை
  • சமம் படுத்தி நன்மை செய்யும் .
  • மேலும் கழுத்தில் இருக்கும் பொழுது அதுனுடன் சேர்த்து நாம் சுவாசம்
  • செய்வோம் இப்படி உள்ளே போகும் பிராணன் ரத்தத்துடன் கலந்து நன்மை செய்யும் .இப்படி கொஞ்சம் கொஞ்சம்மாக ஒரு விகிதத்துடன்
  • உடலில் கலந்து ஒரு பாதுகாப்பு ஏற்படுத்தும் .
  • நாம் குளிக்கும் பொழுது நீரில் கலந்து மேல் தோலின் வழியாக உள்ளே சென்று கொண்டு இருக்கும் இதுவும் ஒரு வகையில் உடலுக்கு வெளியில்
  • ஒரு பாதுகாப்பு தரும் .
  • இப்படி பல நன்மைகள் செய்யும் இந்த மணிகள் பல வகை உண்டு ..


 இதை எந்த எந்த நட்சத்திரம் உள்ள நபர்கள் எதை அணிய வேண்டும் என்று பார்ப்போம் ...

1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்.

  • உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
  • உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
  • இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும்.


உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::

*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.

*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு
.
*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள்.

அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம்.
தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர் பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால் தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்' -என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !