கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள்!

0

 கர்ப்பகாலம் பெண்களின் தவக்காலம் என்பார்கள். பத்து மாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு தாயானவள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுத்தால் அது குழந்தையின் தலைமுறையை பாதிக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். 



துத்தநாகம்

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துத்தநாகச் சத்து சரியான அளவில் இருக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும்  ஏற்றது.

எனவே தான் கர்ப்பிணி தாய்மார்கள் தினசரி உணவில் 15 மில்லி கிராம் புரதச்சத்து அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்து கின்றனர்.  

ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமுறை தலை முறையாக பாதிப்புகள் தொடரும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்து கின்றனர்.

ஃபோலிக் அமிலம்

 போலிக் அமிலச் சத்தானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

எனவே தான் தினசரி 400 முதல் 800 மைக்ரோ கிராம் வரை போலிக் அமிலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கர்ப்பிணிகள் அறிவுறுத்தப் படுகின்றனர். இது பச்சை காய்கறிகளிலும், இலைக்காய் கறிகளிலும் காணப்படு கிறது.

மெக்னீசியம்

கர்ப்ப காலத்தில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மெக்னீசியம் உதவுகிறது. எனவே தினசரி 200 மில்லிகிராம் அளவிற்கு மெக்னீசியம் சத்து அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர்.

 தானியங்கள், பருப்புகள், இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் கிடைப்பதால் கர்ப்ப காலத்தில் அவற்றை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர்.

வைட்டமின் பி 

 கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. எனவே வைட்டமின் பி உணவுகள் இந்த மனஅழுத்தத்தை தடுக்கிறது. 

தினசரி 200 மில்லிகிராம் பி6 வைட்டமின் களை உட்கொண்டால் அது கரு குழந்தைகளின் ஆரோக்கியத் திற்கு ஏற்றது.

அதே போல் வைட்டமின் பி 12 உணவுகள் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஏற்றது. மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனித மூளைக்கு அவசியமானது. 

டிஹெச்ஏ குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது. சல்மான், டுனா வகை மீன்களை கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

அதே போல் கர்ப்ப காலத்தில் தினசரி 1500 மில்லி கிராம் வரை கால்சியம் சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர். 

அதே போல் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி சத்தும் அவசியமானது. கால்சியம் மாத்திரைகளாக உட்கொள்வதை விட யோகர்டு போன்ற உணவுகளை உட்கொள்ள லாம்.

இரும்பு சத்து

கர்ப்பிணிகள் தினசரி 18 முதல் 36 மில்லிகிராம் வரை இரும்பு சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர். 

கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினால் அனீமியா ஏற்படுவதோடு அது பிரசவத்தை சிக்கலாக்கி விடுகிறது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படுவது இயல்பு.

எனவே தைராய்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதே போல் கர்ப்பிணிகள் தினசரி சரியான அளவு தண்ணீர் பருக வேண்டும். 

 இல்லை யெனில் உதடு, வாய் போன்றவை வறட்சியாகி விடும். எனவே கர்ப்ப காலத்தில் உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

அதே போல் கர்ப்ப காலத்தில் தினசரி 8000 யூனிட்டிற்கு மேல் வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே போல் கர்ப்ப காலத்தில் புகைப்பதையோ, மது அருந்து வதையோ தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 

அதே போல் கர்ப்பகாலத்தில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள் வதையோ, 102 டிகிரிக்கு மேல் சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !